கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பலி

திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் திட்டக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தழகன்(50). இவர் திட்டக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் முத்தழகன் நேற்று காலை தனது வீட்டில் இருந்து திட்டக்குடியில் உள்ள நீதிமன்றத்துக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திட்டக்குடி அருகே தர்மக்குக்காடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை முத்தழகன் திரும்பிய போது அரசு பேருந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்தழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் விரைந்து வந்த உயிரிழந்த முத்தழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.