கங்கைகொண்ட சோழபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா

கங்கைகொண்ட சோழபுரத்தில் சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில் முன்புறம், சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பொங்கல் விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில், சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழகத்தில் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளின் நாதஸ்வரம் உள்ளிட்ட மங்கல இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கிராமிய மணம் கமழும் இந்த பொங்கல் திருநாளில்,  அனைவரும்  ஒன்றுகூடி வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்றனர் மாவட்ட ஆட்சித்தலைவர் கலை நிகழச்சிகளை பார்வையிட்டார்.

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளி பிரபு , உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தாசில்தார் துரை , உதவி சுற்றுலா அலுவலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், .அமரிதலிங்கம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 − = 38