எம்.ஆர். கல்லூரியில் வேதியியல் துறை சார்பாக கருத்தரங்கம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் நானோ மெட்டீரியல்ஸ் ரீசென்ட் டெவெலப்மென்ட்ஸ் அண்டு டைரக்ஷன்ஸ் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன் தலைமை தாங்கினார்.
இயக்குநர் முனைவர் ஆர்.இராஜமாணிக்கம் வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் முனைவர் ப.சங்கீதா முன்னிலை வகித்தார். வேதியியல் துறைத்தலைவர் ப.ஸ்டீபன் வரவேற்புரையாற்றினார். தலைமை உரையில் கல்லூரி தாளாளர் பேசுகையில், வேதியியல் துறையில் வேலைவாய்ப்பு அதிக அளவில் உள்ளன என்றும், “நானோ மெட்டீரியல்” ஆனது இன்றைய அறிவியல் உலகில் மிகவும் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக கருதப்படுகிறது என்றும் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் செந்தில்வேலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,  புதியதாக வளருகின்ற தொழில்நுட்பத்தில் நானோ மெட்டீரியல் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றியும் மாணவர்கள் அந்தப் பாடத்தை படிப்பதன் மூலம் வேலைவாய்ப்பில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை பற்றியும் இன்றைய மருத்துவத்துறையில் “Nano Chemistry” எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பது பற்றியும் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். இறுதியாக வேதியியல் துறை பேராசிரியர் செல்வராணி நன்றியுரை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைத்தலைவர் ப.ஸ்டீபன் தலைமையில், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  செய்திருந்தனர்.