எம்.ஆர். கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்பு பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

எம்.ஆர். கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்பு பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்துள்ள, தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் சார்பாக, தேசிய பேரிடர் மீட்பு பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர்  எம்.ஆர்.இரகுநாதன்  தலைமை தாங்கினார். முதல்வர்கள் முனைவர் சங்கீதா மற்றும் சம்பத்,  ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்,  உடையார்பாளையம் வருவாய் ஆய்வாளர்   மற்றும் தத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்னிந்திய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், கல்லூரி மாணவர்களுக்கு தேசிய பேரிடர்கள் குறித்தும், தேசிய பேரிடர்களால் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து  தங்களை தற்காத்துக் கொள்வது மற்றும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் பேரிடர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதை அறிந்து கொண்டு, மாணவர்களும் மேடையில் பல தற்காப்பு பயிற்சிகளை செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர்.