எடப்பாடி பழனிசாமி அரியலூர் வருகை தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூட்டம் 

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரியலூர் வருகை தொடர்பாக, அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக அரியலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு, கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட துணைச் செயலாளருமான ராம ஜெயலிங்கம் வரவேற்று பேசினார்.

வருகிற 20-ஆம் தேதி, அரியலூரில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், கலந்து கொண்டு சிறப்பிக்க வருகை தரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக, அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ் .ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.

அதிமுக மாநில, மாவட்ட  நிர்வாகிகள் அறிவு என்கிற சிவசுப்பிரமணியன், ஓ.பி .சங்கர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பிரேம் குமார், சிவா என்கிற பரமசிவம், ஜெயங்கொண்டம் நகரச் செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பாலசுப்பிரமணியன், அசோகன், வைத்தியநாதன், வடிவழகன், ராமச்சந்திரன், தங்கப்பிச்சமுத்து, கல்யாணசுந்தரம், விக்கிரம ராஜா,சாமிநாதன்,புரட்சி சிவா, வக்கீல் குலோத்துங்கன்  எஸ்.வி. சாந்தி, கோபாலகிருஷ்ணா, நகராட்சி கவுன்சிலர் வக்கீல் வெங்கடாஜலபதி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சிவஞானம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் அரியலூர் நகர செயலாளர் ஏ.பி.செந்தில் நன்றி கூறினார்.