உளுந்தூர்பேட்டை ஒன்றிய ஊராட்சிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டஎலவனாசூர்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன்குமார் தலைமையில், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன்முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 53 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 21 ஒன்றிய குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டம்,  பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,  தேசியஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மற்றும் 15-வது மானியக்குழு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் தற்போதைய நிலை, முடிவுற்ற பணிகளின் நிலைகுறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் வருகை பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இவ்ஆய்வுக் கூட்டத்தில் ஒன்றிய குழுத் தலைவர் ராஜவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் இராஜேந்திரன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.