உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி தொடர்ந்து 6வது நாளாக அன்னதானம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 25ம் தேதி வறுமை ஒழிப்பு தினமாக அன்று முதல்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  அனைத்து ஒன்றியங்களில் உள்ள பேரூர் கழகங்கள் மற்றும் கிளைக் கழகங்கள் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட காட்டுஎடையார் கிராமத்தில் கிளைக் கழக சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை வறுமை ஒழிப்புத் தினமாக கொண்டாடும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் கருணாகரன் வழிகாட்டுதலின்படி, காட்டுஎடையார் கிளைக் கழக நிர்வாகிகள் சலீம், சுபாஷ், சங்கர் ஆகியோரின் ஏற்பாட்டில், ஒன்றிய பொருளாளர்  ராஜா, துணை செயலாளர் ஏழுமலை முன்னிலையில், உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் அருள் தலைமையில் இன்று கழக கொடியேற்றி  500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் குன்னத்தூர் பெருமாள், ஒன்றிய துணை செயலாளர்கள் எம்.சிவக்குமார், பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், காட்டுஎடையார் கிளை நிர்வாகிகள் வள்ளிக்கந்தன், ஏழுமலை, பூபாலகன், ஆறுமுகம், ராமச்சந்திரன், சுப்பிரமணியன், சேட்டு, ரமேஷ், சிவப்பிரகாசம், கலியமூர்த்தி, கிருஷ்ணன், ஜெய்சங்கர், அய்யனார், அண்ணாதுரை மற்றும் எறையூர் கிளைக் கழக நிர்வாகிகள் ஜோசப், சூசைராஜ், ஜான்கென்னடி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.