உளுந்தூர்பேட்டை அருகே பூ வியாபாரி வாகன விபத்தில் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கிளியூர் கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் அய்யனார் வயது 46,  விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை கடலூர் மாவட்டம், தொழுதூரில்  பூ வியாபாரத்தை முடித்துவிட்டு உளுந்தூர்பேட்டையில் இருந்து சொந்த ஊரான கிளியூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது பாண்டூர் கிராமம் அருகே எதிரே வந்த நான்கு சக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தகவலறிந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பூ வியாபாரியின் உடலை உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.