உளுந்தூர்பேட்டை அருகே திறந்தவெளியில் பதுக்கி வத்திருந்த 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திறந்தவெளி விவசாய நிலத்தில் சுமார் 25 டன் ரேஷன் அரிசியை கடத்த பதுக்கி வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உளுந்தூர்பேட்டை வனத்துறையின் வனச்சரக அலுவலர் ரவி தலைமையில் வனவர் ஸ்ரீ ராம், வனக்காப்பாளர்  ராமநாதன், ஆகியோர் நேற்று முந்தினம், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, திருநரங்குன்றம், மற்றும் ஆத்தூர் கிராமப் பகுதியில்  சந்தேகபடும்படியாக சென்ற வாகனத்தை சுற்றி வளைத்த போது கடத்தல் கும்பல் தப்பிச்சென்று விட்டனர்.

அங்கு திறந்தவெளி விவசாய நிலத்தில் 50 கிலோ எடை கொண்ட சுமார் 500 மூட்டைகள், அதாவது 25 டன்  ரேஷன் அரிசியை வெளிமாநிலத்திற்கு  கடத்த பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளையும், மினி டெம்போ வாகனத்தையும் பறிமுதல் செய்து திருநாவலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசந்திரன் மற்றும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இப்பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + = 15