உளுந்தூர்பேட்டையில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசை கண்டித்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை  ஆகிய மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பழங்குடி இருளர்  பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு செயலாக்க துறையின் உத்தரவின்படி விடுபட்டவர்கள் அனைவருக்கும் சாதி சான்று, வீட்டுமனை பட்டா, நலவாரிய உறுப்பினர் அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை விரைவில் வழங்க வேண்டும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்படுவது போல் ரூபாய் 5.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், மேலும் பழங்குடியின மக்களுக்கென்று மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை முழுமையாக பழங்குடி மக்களுக்கே செலவிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உளுந்தூர்பேட்டை பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இருளர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.