திருவொற்றியூர் எம்.எல்.ஏ., சங்கர் ஏற்பாட்டில் மணலி விரைவு சாலை சத்திய மூர்த்தி நகர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தி.மு.க., மாணவரணி தலைவராக பொறுப்பேற்று இருக்கும் ராஜீவ் காந்தி கலந்து கொண்டு ஏழை, எளிய பெண்களுக்கு தையல் இயந்திரம், புடவைகள் மற்றும் சமபந்தி விருந்து பரிமாறினார். ஜாதியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும் பிளவுபடுத்த நடக்கும் அரசியலுக்கு எதிராக எதிர்காலத்தில் அவற்றை எல்லாம் எதிர்த்து நிற்கும் திராவிடத்தின் நம்பிக்கை உதயநிதி ஸ்டாலின். தமிழினம் நிற்கதியாக நின்ற போது தாங்கி நிற்கின்ற குடும்பமாக இருந்தது என்பதாலேயே உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறோம். ஒரு தந்தை இடத்தில் இருந்து தமிழக முதல்வர் மாணவிகளுக்கு மாதம் 1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என்று பேசினார்.
நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் ராமநாதன், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், வட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி சைலஸ், கார்க்கியேன், தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பால உமாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.