
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சி ஒன்றியத்தில் முழுசுகாதாரத்தை நோக்கி உலக கழிப்பறை தினம், மக்களின் பயணம் நடைபெற்றது.
இதில், எனது ஊராட்சியை திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக மாற்றுவோம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை கழித்து, துணிப்பையை உபயோகப்படுத்துவேன். மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து தூய்மை காவலரிடம் வழங்குவேன், என உறுதி மொழி எடுத்து கோஷமிட்டு நடை பயணம் செய்தனர்.
பயணத்தில் ஏராளமான கிராம பொது மக்கள், தூய்மை பணியாளர்கள், பஞ்சாயத்து செயல் அலுவலர் முருகேசன், ஜோதிராமன், சீமானூத்து பஞ்சாயத்து ஆசிரியர்கள் அருள்தாஸ், அமிர்தசிரோண்ணி, சத்தியலட்சுமி, பட்டம்மாள் மற்றும் மாணவ, மாணவியர்கள், ஊர் பொது மக்கள் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.