ஈரோடு மாவட்டத்தில் குரூப் -1 தேர்வு33 மையங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 33 மையங்களில் நடந்த குரூப் -1 தேர்வை அதிகாரில் நேரில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் -1 தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வானது 33 மையங்களில் நடைபெற்றது.

மொத்தம் 92 பதவிகளுக்கான இந்த எழுத்துத் தேர்வில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 115 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு கண்காணிக்கும் பணியில் 9 பறக்கும் படைகள், 7 நடமாடும் குழுக்கள், 34 ஒளிப்பதிவாளர்கள், 33 கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருந்த 33 தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு எழுத வந்தவர்கள் இந்த பஸ்ஸில் சென்று பயனடைந்தனர்