
ஈரோடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆய்வு கூட்டங்கள் நடத்தக்கூடாது. விடுமுறை நாட்களில் ஆய்வு பணிகள் உயர் அலுவலர்களால் நடத்தப்படுவதை கைவிட வேண்டும். தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலர் முதல் உதவி இயக்குநர் நிலைவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், மொடக்குறிச்சி, ஈரோடு, கொடுமுடி, பெருந்துறை உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 732 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தினால் 100 நாள் வேலைதிட்டம், பிரதமர் வீடுகட்டும் திட்டம் உட்பட மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் அனைத்துத் திட்ட பணிகளும் பாதிப்படைந்தது. ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் டிசம்பர் 14ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.