இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பெற்றோர்களிடம் கலந்துரையாட வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் அறிவுரை..

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பெற்றோர்களிடம் கலந்துரையாட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் தன்னார்வலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம்,கந்தர்வக்கோட்டை ஒன்றியம்,மட்டங்கால் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது அங்கிருந்த தன்னார்வலர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் பேசியதாவது: இல்லம் தேடி கல்வி மையம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்.தன்னார்வலர்கள் மாணவர்களின் வருகைப் பதிவை தினமும் இல்லம் தேடி கல்வி செயலியில் பதிவு செய்ய வேண்டும்.பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் தன்னார்வலர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.தன்னார்வலர் பள்ளியின் ஆசிரியர் , தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களை  சந்தித்து மாணவர்களின் கற்றல் நிலை குறித்து உரையாடல் மேற்கொள்ள வேண்டும்.மாணவர்களின் கற்றல் அடைவை தெரிந்து கொள்ள தன்னார்வலர் அடைவுத்திறன் அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்றார்.

முன்னதாக மையத்திற்கு வந்திருந்த மாணவர்களிடம் மையத்தில் தன்னர்வலர்கள்  உங்களுக்கு என்னென்ன கற்றுத் தருகிறார்கள் என்பதை கேட்டறிந்தார்.பின்னர் மாணவர்களின் வாசிப்புத் திறனை சோதிக்கும் விதமாக  தமிழ் ,ஆங்கில பாடப்புத்தகங்களை கொடுத்து  வாசிக்கச் செய்தார்.நன்றாக வாசித்த மாணவர்கள் மற்றும் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதிலளித்த மாணவர்களையும் பாராட்டினார்.

நி்கழ்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி ,இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,கந்தர்வக்கோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லா ,மட்டங்கால் குடியிருப்பு  தன்னார்வலர்கள் வளநிஷா,கெளரி,ஜான்சி,செளமியா,தங்கமணி,சிந்துநதி

ஆகியோர் உடன் இருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

97 − 92 =