இலவா வீட்டுமனை பட்டா வழங்க வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோட்டாட்சியர் பூங்கொடி உடன் இருந்தார்.

அரசுக்கு சொந்தமான பாதை புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வரும் 11 குடும்பங்களுக்கு அளவீடு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அணைகட்டு தாசில்தார் தெரிவித்திருந்தார்.

ஆய்வின் போது, அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், மாவட்ட ஊராட்சித் திட்டக்குழு தலைவர் பாபு, நகர செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, தலைவர் சுப்பிரியா, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, வெட்டுவானம் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) வெங்கடேசன், வார்டு கவுன்சிலர் குறிஞ்சிசெல்வன்,  மக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.