கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சியில், உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பயின்று வரும் 7ம் வகுப்பு மாணவன் நவின்ராஜ் சேலம் மேச்சேரியில் ஃபிட் இந்தியா நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் மினிஸ்டரி ஆஃப் கார்ப்பரேட் அஃபையர்ஸ் இணைந்து நடத்திய சிலம்பம் சுற்றும் போட்டியில் கலந்து கொண்டு, 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.
உலக சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவனை ஊக்குவிக்கும் விதமாக உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், இருபால் ஆசிரியர்கள் சங்கர், பிரேமா, ரிஹானாபானு, மாதுரி, உடற்கல்வி ஆசிரியர் ஈஸ்வரன் ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.