இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 கள்ளக்குறிச்சி மாவட்டம்,  உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வார் திருஉருவப்படத்திற்கு  நகரமன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன், மூத்த வழக்கறிஞர் பொன்.இராவணன்,  ஆத்மா குழுத் தலைவர் அன்புமணி, வேளாண்மை துறை அலுவலர்கள் ஜோதி, ராமலிங்கம், பாலமுருகன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டு நம்மாழ்வார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்,  இந்த நிகழ்ச்சியில்  மா, திப்பிலி, பனை, உள்ளிட்ட இயற்கை விதையால் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு  இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவை போற்றும் விதமாக வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 5