இந்திரா காந்தி பிறந்தநாள் விழா ஈரோடு காங்கிரஸார் கொண்டாட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடந்தது.

விழாவில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்களான அல்டிமேட் தினேஷ், சசிகுமார், ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்செல்வம் , இந்திராகாந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆரிப் இனிப்பு வழங்கினார். இந்திரா காந்தி பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.