இந்திய வீரர் வினோத் குமார் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் வினோத் குமார் வென்ற பதக்கம் திரும்பப் பெறப்பட்டது.

டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் விளையாட்டில் வெண்கலம் வென்றார் 41 வயதான இந்திய வீரர் வினோத் குமார். F52 பிரிவில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றார்.

ஆனால் தற்போது தொழில்நுட்பக் குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. வட்டு எறிதல் எஃப் 52 பிரிவில் பங்கேற்க வினோத்குமார் தகுதியற்றவர் என தொழில்நுட்பக்குழு அறிவித்திருக்கிறது. இதனால் துரதிர்ஷடவசமாக இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஒன்று குறைந்திருக்கிறது.