ஆவுடையார்கோவில் துரையரசபுரம் அருகே பனை ஓலை வெட்ட  சென்றவர் மின்சாரம் தாக்கி பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட அல்லறை காளி கோயில் அருகே உள்ள பனை மரத்தில் வீட்டிற்கு பயன்படுத்த பனை ஓலை வெட்டச் சென்ற வெள்ளை செட்டி வயல் கிராமத்தைச் சேர்ந்த நாகன் மகன் ராமன் (70)என்பவர் கையில் வெட்டறிவால் உடன் பனை மரத்தில் ஏறியவர் அருகே ஹெச்பி லைன்செல்வது தெரிந்தும் பனை மரத்தில் ஏறி ஓலையை வெட்டியுள்ளார். பனை ஓலை எச்பி லைனில் பட்டதால் மின்சாரம் தாக்கி பனை மரத்திலேயே சடலமாக தொங்கியுள்ளார்.

 இதனை அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ள ஆடு மேய்ப்பவர்கள் ஆவுடையார்கோவில் காவல் நிலையத்திற்குதகவல் சொல்லவே அங்கு வந்த ஆவுடையார்கோவில் காவல்துறையினரும் அறந்தாங்கி தீயணைப்பு நிலைய அலுவலர்களும் சடலத்தை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்சம்பவம் தொடர்பாக ஆவுடையார்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், விவசாயி பனை ஓலை மரத்தில் இறந்தது அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது.