ஆவுடையார்கோவில் அருகே குளத்துகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

ஆவுடையார்கோவில் ஒன்றியம் குளத்துகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா ஆவுடையார் கோவில் வட்டார கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் மன்றம் நா.சண்முகநாதன் வரவேற்புரையாற்றினார் உதவி ஆசிரியர் முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் ஊர் அம்பலம் செல்வராஜ் ஊராட்சி மன்ற உறுப்பினர் அனிதா பள்ளி மேலாண்மை குழு தலைவி சுகன்யா பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அஞ்சலை ஆத்மநாதன், பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் பாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் நல்ல முகமது, நாகரத்தினம், சாலமன், செல்லதுரை, ஆத்மநாதன், குமாரவேல், காளிமுத்து. கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம், மணி, முத்து, சிவா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

வட்டார கல்வி அலுவலர் நரசிம்மன் அவர்கள் பேசுகையில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் தமிழ் வழி கல்வியில் பயில வேண்டும் என வலியுறுத்தி முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து பெற்றோர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள்.