ஆவுடையார்கோவில் அருகே திருவாக்குடியில் சமத்துவ மற்றும் சுகாதாரப் பொங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள திருவாக்குடி ஊராட்சியில்  இன்று  சமத்துவம் மற்றும் சுகாதார பொங்கல் ஊராட்சி மன்றத் தலைவர் கலா கருப்பையா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளும் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. திருவாக்குடி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் மத்தியில் அனைவருக்கும் கரும்புடன் பொங்கல் வழங்கப்பட்டு வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது  மேலும் நிகழ்ச்சியில் கவுன்சிலர் கணேசன் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கினார், சிறப்பு விருந்தினராக ஏம்பல் சுகாதார ஆய்வாளர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காளிஸ்வரி ராஜா உட்பட  நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.