புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் குன்னூர் ஊராட்சியில் உள்ள பள்ளத்தை வயல் கிராமத்தில் நேற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் குன்னூர் ஊராட்சி மன்றத் தலைவர் பா. காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மணமேல்குடி விஜய் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பூங்குழலி மற்றும் செவிலியர்கள், மருந்தாளுநர்கள், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் மருந்துகளும் வழங்கினர், நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர், தலைமை ஆசிரியர், ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.