ஆவுடையார்கோவில் அருகே களபம் கிராமத்தில்  வைக்கோல் போர் கொளுத்தப்பட்டதால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிலுள்ள களபம் கிராமத்தில் சதாம் உசேன் குடும்பம் உள்ளது இந்த குடும்பத்தின்வீடு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சாலை ஓர புறம்போக்கில் உள்ளது என்று சொல்லி கிராமத்து மக்கள் இடித்துள்ளார்கள்,  எனவே சதாம் உசேன் அந்த கிராமத்தில் உள்ள சுமார் 1000 ஏக்கர் புறம்போக்கு நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த ஊர் தலைவர் பாஸ்கர் மற்றும் களபம் ஊராட்சி மன்றத் தலைவர்முருகானந்தம் ஆகியோர்சதாம் உசேன் குடும்பத்திற்கு பல்வேறு வழிகளில் துன்புறுத்தல் கொடுப்பதாக கூறப்படுகிறது, இந்நிலையில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் சதாம் உசேனின் வைக்கோல் போருக்கு தீ வைத்து சென்றுள்ளார்கள், தீயணைப்பு நிலையத்திற்கு சதாம் உசேன் தகவல் சொல்லியும் தீயணைப்பு நிலைய வண்டி சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது,மற்றும் சதாம் உசேன் வீடு அருகே உள்ள மரங்களை வெட்டி வீழ்த்தியும் அவரின்  வீடு அருகே உள்ள தென்னம்பிள்ளையை பிடுங்கி பொதுமக்கள் குளத்தில் எரிந்து சென்றுள்ளார்கள். மற்றும்  அவர் வீட்டில் வசித்த இரண்டு நாய்களுக்கும் மற்றும் கோழிகளுக்கும் விஷம் வைத்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள், எனவேஅரசு புறம்போக்கு நிலங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றுபோராடும் சதாம் உசேனுக்கு மிகப்பெரிய நெருக்கடிகளை கொடுத்து உயிர் பலியை ஏற்படுத்த முயலும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சதாம் உசேன் கரூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.