ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு பேரணி 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில்போதை பொருள் விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது. இந்நிகழ்வினை மாவட்டக் கல்வி அலுவலர் முனைவர் இராஜராமன் துவக்கி வைத்தார்.மாணவர்கள் பேரணியாக நடந்து சென்று  போதைப்பொருள் தடுப்பு சார்ந்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் இட்டும்  கடைவீதியில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின்,நாட்டுநலப்பணித் திட்டத்தின் திட்ட அலுவலர் குமார், பள்ளித் துணை ஆய்வாளர் இளையராஜா ஆசிரியர்கள் சுப்பிரமணியன் கந்தவேள் ,செந்தில்குமார்,அரசக்குமார், முருகேசன், திருவருட் செல்வன், உடற்கல்வி ஆசிரியர் பாக்கியா ராஜ்உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.