ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம்

ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நேற்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வின் வரவேற்புரை மற்றும் கூட்டத்திற்கான நோக்கவுரையை பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் ஆற்றினார். பார்வையாளராக கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி, கல்வியாளராக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சுகுமார், ஊராட்சி பிரதிநிதியாக பானுமதியும், கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 125 பெற்றோர்கள் சார்பில் 10 பெண் மாணவர் பிரநிதியும், 5 ஆண் மாணவர் பிரதிநிதியும் தேர்ந்தெடுக்கப்பட்னர். அதில் தலைவராக கவிதாவும், துணைத் தலைவராக கற்பகமும், சுயநிதி குழு  உறுப்பினராக மாலினியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து, உறுப்பினருக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் பள்ளியில் மாண்வர்களை 100 % தேர்ச்சி பெறசெய்த ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு  வழங்கி கௌரவிக்கப்பட்டனர். புரவலராக எஸ்எம்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் (10 புரவலர்கள்) தங்களை இணைத்துக் கொண்டு ரூ.10500 நிதி வழங்கி சிறப்பித்தனர். காளிமுத்து கலைக்குழு சார்பாக நாட்டுப்புற பாடல் பாடப்பட்டு எஸ்எம்சி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.