ஆவுடையார்கோவிலில் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி.

ஆவுடையார்கோவில், ஜன.13-

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் வழிகாட்டுதலின்படி திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனம் பேங்க் ஆப் அமெரிக்கா இணைந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோவில் வள மையத்திற்குஉட்பட்ட 25 ஆசிரியர்களுக்குஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆறுமுகம் தலைமை தாங்கினார், கிராமாலயா தலைமை அலுவலர் கே.மீனாட்சி முன்னிலை வகித்தார், கிராமாலயா தொழில்நுட்ப அலுவலர் சிவனேசன் வரவேற்புரை நிகழ்த்தினார், கிராமாலயா நிறுவனத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ எஸ். தாமோதிரனின் 37 வருட பயணங்களும் சாதனைகளும் பற்றி கிராமாலயாவின் தொழில்நுட்ப அலுவலர் யுவராஜ் விளக்கிப் பேசினார், அம்சவல்லி கிராமாலயாவின் முக்கிய கூறுகளை எடுத்துரைத்தார், கிராமாலயாவின் தலைமை அலுவலக பணியாளர்  கே. மீனாட்சி , மாதவிடாய் சுகாதாரம் பற்றி எடுத்துரைத்தார்,ஊட்டச்சத்துக்கள் பற்றி சத்யா  எடுத்துரைத்தார், லீனா சுகாதாரம் பற்றி பாட்டுப் பாடி ஆசிரியர்களை மகிழ்வித்தார், இறுதியாக.எஸ். பழனிச்செல்வி  ஆவுடையார்கோவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர், இறுதியாக உமாமகேஸ்வரன் கலந்து கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினார், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.