ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புள்ளியல்துறை மூலம் வேளாண்மை கணக்கெடுப்பு பணி அதிகாரிகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு ஆணையின்படியும்மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி அறிவுறுத்தலின் பேரில் பதினோராவது வேளாண்மை கணக்கெடுப்பு 2021 – 22 ம் பயிற்சியில் வேளாண்மை கணக்கெடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்ச்சி நடைபெற்றது.

இக்கணக்கெடுப்பு பயிற்சிக்கு ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி தலைமையில் நடைபெற்றது, பயிற்சியை கோட்ட புள்ளியல் உதவி இயக்குனர் ராவுத்தர் நைனா, அறந்தாங்கி கோட்ட புள்ளியில் உதவி இயக்குனர் முத்துராமலிங்கம், திருவரங்குளம் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் இப்பயிற்சி பற்றியும் டிஜிட்டல் செயலி குறித்தும் அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர், பரப்பளவின் அடிப்படையில் சிறு குரு நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் ஆண், பெண் வாரியாகவும் சமூக அடிப்படையில் கணக்கெடுப்பு எடுக்கப்படும், வேளாண்மை கணக்கெடுப்பு எப்படி மேற்கொ ள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டதுஇந்த ஆண்டு முதல் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு முறையை கையாள்வது என்றும் இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள மண்டல வட்டாட்சியர் பழனியப்பன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலகோபாலன் அலுவலகப் பணியாளர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர்களுக்கு விரிவான வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

49 − = 40