
ஆலங்குடி அருகே வடகாட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு வடக்கு சேவைக்காரன்பட்டியை சேர்ந்தவர் கந்தையா மகன் ரமேஷ் (30).இவர் தனது வீட்டிலிருந்து வடகாடு கடைவீதிக்கு வந்து கொண்டிருந்தார், அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரமேஷ் மீது மோதியது, இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் வேகமாக சென்று விட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வடகாடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த ரமேஷின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், அதிகாலையில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்காததை கண்டித்து உயிரிழந்த ரமேஷின் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வடகாடு காவல்துறையினா் பேச்சுவார்த்தை நடத்தினர், பின்னர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர், இந்த சாலைமறியல் போராட்டத்தினால் புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.