ஆதனக்கோட்டையில் பழுதடைந்த நிழற்குடையை இடித்து விட்டு புதியநிழற்குடை கட்ட பொதுமக்கள் கோரிக்கை

ஆதனக்கோட்டையில் பழுதடைந்த நிழற்குடை இடித்து விட்டு புதிய நிழற்குடை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பழைய ஆதனக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன் கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடையின் மேற்கூறையில் பல்வேறு இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும் சுவர்களில்   பல்வேறு விரிசல்களுடன் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிக நேரம் பேருந்து நிழற்குடையில் காத்திருந்து பேருந்து ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.  பழுதடைந்த நிழற்குடையால் பொதுமக்களுக்கு பேராபத்து ஏற்படுவதை தடுக்க பழைய நிழற்குடையை இடித்து புதிய நிழற்குடை கட்டிதர வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.