அறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு முதல்வர் மலர்தூவி மரியாதை!!!

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள  அவரது திருவுருவ படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் தான் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் இரு மொழி கொள்கையை கொண்டுவந்தவர். இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மரியாதையும் அவருடைய திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். முதல்வர் இங்கு மரியாதை செலுத்திய பிறகு வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கும், அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கும் மரியாதை செலுத்த உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3