புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் தனியார் கெமிக்கல் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த கெமிக்கல் ஆலையில் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர், அறந்தாங்கி கெமிக்கல்ஸ் பணியாளர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையில் இணைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் சங்க பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், புலம்பெயர் தொழிலாளார்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று வதந்தி பரப்பப்பட்டது, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றும், தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருவதோடு பாதுகாப்பாக இருக்கிறார்கள் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார் முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் புலம்பெயர் தொழிலாளர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் ஆனந்த் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட கவுன்சிலர் சரிதாமேகராஜன் கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன், நகர்மன்ற உறுப்பினர் துளசிராமன் மற்றும் கெமிக்கல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.