
அறந்தாங்கி அருகே ஆலங்குடி
கண்மாய்க்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்பாசன சங்க தலைவர்கள் தலைமையில் விவசாயத்திற்கு மடை திறந்து விடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆலங்குடி கண்மாயிலிருந்து தற்போதைய விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்பாசன சங்க தலைவர் ராமசாமி மற்றும் கலாவதி இளங்கோவன் தலைமையில் ஆலங்குடி கண்மாய் மடைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் தூவி மடை திறந்து விடப்பட்டது. மடையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அந்தப் பகுதியில் தூர்வாரப்பட்ட வாய்க்கால்கள் மூலம் வயல் பகுதிக்கு சீறிப்பாய்ந்தன. நிகழ்ச்சிகள் கிராம நிர்வாக அலுவலர் வினோத் நீர்வளத் துறையினர் நாடிமுத்து,
பணி ஆய்வாளர் வெங்கடேசன், உறுப்பினர்கள் இளங்கோவன், வெள்ளைச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், கண்ணன்,காமராஜ், முருகேசன்,ராசு, கோபால்,ரவி, காளிமுத்து,கலா, கருப்பையா, கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்