
சுவாமி விவேகானந்தர் 160 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாகுடியில் பாஜகவினர் விவேகானந்தர் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடி கடை வீதியில் பாஜகவினர் சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு விவேகானந்தர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியானது ஒன்றியத் தலைவர் சக்திவேல் தலைமையில் மாவட்டத் தலைவர் செல்வம் அழகப்பன்,மாவட்ட செயலாளர் முரளிதரன் ஒன்றிய பொதுச் செயலாளர் பாலமுருகன் மற்றும் வடிவேல் முன்னிலையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.