அறந்தாங்கியில் ஓவியப்போட்டி எம்எல்ஏ இராமச்சந்திரன் பங்கேற்பு

அறந்தாங்கி சாமி வி லேண்ட்மார்க்ஸ் நிறுவனங்களின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அதன் தொண்டு அமைப்பான சாமி வி அறக்கட்டளையின் சார்பில் மாவட்ட அளவிலான நிறங்கள் 2023 ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு, சாமி வி லேண்ட்மார்க்ஸ் நிர்வாக இயக்குநர் சாமி வெங்கட் தலைமை தாங்கினார். 

நிறங்கள் ஓவியப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் பூபதி ஆசிரியர் மதியழகன்,வட்டாட்சியர் கருப்பையா, சாமி வி அறக்கட்டளையின்  அறங்காவலர் செல்ல சிலம்பேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி எம்எல்ஏ இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஓவியப்போட்டியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்த  ஓவியப்போட்டியில்  250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆசிரியர் ஜேம்ஸ் நடுவராக செயல்பட்டார்.

நிறங்கள் ஓவியப்போட்டி ஒருங்கிணைப்புக்குழு ஆசிரியர் பார்த்திபராஜா அனைவரையும் வரவேற்றார். சாமி வி லேண்ட்மார்க்ஸ் மேலாளர் கணேஷ் நன்றி கூறினார். மு.பழனித்துரை தொகுத்து வழங்கினார். போட்டி மற்றும் விழா ஏற்பாடுகளை வேலு,ஸ்ரீதர்,ஜீவா,விஜய், வடிவேலு, பாரதி, முருகானந்தம், சுரேஷ் உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.