அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் சீட்டா என்ற பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்ட்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9:15 மணியளவில் விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.