அரியலூர் மெய் மாண்டசெரி பள்ளியில் திருக்குறள்  போட்டி

அரியலூர் மெய் மாண்டசெரி பள்ளியில் திருக்குறள் போட்டி நடைபெற்றது.

அரியலூர் மெய்யப்ப செட்டியார் ஜுவல்லரி மற்றும் தவுத்தாய் குளம் மெய் மாண்டசெரி பள்ளி நிர்வாகம் இணைந்து நடத்திய திருக்குறள் போட்டி, அரியலூர் அருகே தவுத்தாய்குளம் மெய் மாண்டசெரி பள்ளியில் நடைபெற்றது. அரியலூரை சேர்ந்த ஆர்.தியாகராஜன் செட்டியார் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளின் நடுவர்களாக, அரியலூர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புலவர் சி.இளங்கோ, லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலைய தலைமையாசிரியர் சௌந்தர்ராஜன், ராமசாமி ஆசிரியர், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை மங்கையர்க்கரசி மற்றும் நித்திய பிரியா, தர்ஷினி, ஆகியோர் செயல்பட்டனர். மெய் மாண்டசெரி பள்ளியின் தாளாளர் சுமதி வரவேற்று பேசினார்.

அரியலூர் கோல்டன் கேட் பள்ளி,  லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையம், திருமழபாடி கலைமகள் பள்ளி,  கீழப்பழுவூர் விநாயகா பள்ளி, மற்றும் ஓ.கூத்தூர், ஆண்டிபட்டாக்காடு சிறுவளுர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற, திருக்குறளின் இரண்டு அதிகாரங்களில், விளக்க உரையுடன் கூடிய குறள்கள் மற்றும் திருக்குறள் சார்ந்த கதை ஒப்பிக்கும் போட்டி நடைபெற்றது.

அதில் முதல் மற்றும் இரண்டு கட்டங்களாக தேர்வு பெற்ற  நான்கு மாணவ, மாணவிகளுக்கான பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் திருக்குறள் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஜெயஷீலா, பிரியங்கா மற்றும்  சிறுவளுர் பள்ளி ஆசிரியர் செவ்வேள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆர்.தியாகராஜன் நன்றி கூறினார்.