அரியலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள் அனுஷ்டிப்பு!

அரியலூரில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பகுஜன் சமாஜ் கட்சி, அ.ம.மு.க.,  பா.ம.க., நாம் தமிழர் கட்சி, ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு, அரியலூர் செட்டி ஏரி கரையில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் உத்திராபதி தலைமையில், கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் நீலமேகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை, பொருளாளர் பாண்டியன், பொதுச் செயலாளர் சற்குரு, இருளப்பு செல்வகுமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.ம.மு.க., சார்பில், தா.பழூர் ஒன்றிய செயலாளர் பருக்கல் புகழேந்தி தலைமையில், கட்சியின் நிர்வாகியும், மனகெதி ஊராட்சி மன்ற தலைவருமான பழனிவேல் உள்ளிட்டோர், அரியலூரில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏ.ஐ.டி.யு.சி., அரியலூர் மாவட்ட பொதுச் செயலாளர் தண்டபாணி தலைமையில், சங்க நிர்வாகிகள் மாரியப்பன், நல்லுசாமி, சிவஞானம் உட்பட பலர், அரியலூர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ம.க., மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில், அக்கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், பொன் சங்கர்குரு, கோவிந்தன், பவுன்ராஜ், நல்லதம்பி, சதீஷ் உள்ளிட்டோர், அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில், கட்சி நிர்வாகிகள் சுதாகர், மோகன், தங்கதுரை, சீராளன், ஞானவேல் உள்ளிட்டோர், அரியலூரில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வி.சி.க., மாநில துணைப் பொதுச் செயலாளர் அன்பானந்தம் தலைமையில், கட்சியின் தொகுதி செயலாளர் மருதவாணன், கட்சி நிர்வாகிகள் தனக்கோடி, சுதாகர், ராஜேந்திரன், தங்கராசு உள்ளிட்ட பலர் அரியலூரில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 36 = 45