அரியலூர் பெரிய திருக்கோணம் அரசு பள்ளி வளாகத்தில் கல்வி மேம்பாட்டு விழா

பெரிய திருக்கோணம் அரசு பள்ளி வளாகத்தில், கல்வி மேம்பாட்டு விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், பெரிய திருகோணம் கிராமத்திலுள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், கிராமப்புற மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்காக, சென்னையில் தொழில் நிறுவனம் நடத்தி வரும், அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது, அருணாச்சலா இன்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட்  சார்பில், சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட, ஸ்மார்ட் வகுப்பு, அறிவியல் கூடம், நூலகம், சுவாமி மாணிக்கம் உணவு கூடம், உள்ளிட்டவற்றுக்கான துவக்க விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ. ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மான்விழி வரவேற்று பேசினார், ஸ்மார்ட் வகுப்பு, அறிவியல் கூடம், நூலகம், உணவு கூடம் உள்ளிட்டவற்றை, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் க. சண்முகம் திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார். விழாவில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு. சின்னப்பா, ஒன்றிய கவுன்சிலர் மாலா சாமிநாதன், இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் காசி நாதன்(ஓய்வு), தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது மேலாளர் பாலகிருஷ்ணன் (ஓய்வு), ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி ஜெயராமன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்.

அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், ஜெயங்கொண்டம் டிஎஸ்பி  கலைக் கதிரவன், வட்டார கல்வி அலுவலர்கள் நீலமேகம், கலியபெருமாள், பெரிய திருக்கோணம் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிக்குமார், பெரிய திருக்கோணம் ரமேஷ், தரணி குமார், பள்ளி ஆசிரியர்கள் திருமுருகன், ஜெயராஜ், உமாதேவி, ஊராட்சி செயலாளர்கள் சேட்டு, ராஜேஷ் கண்ணன், விவசாய சங்கப் பிரதிநிதி தூத்தூர் தங்க தர்மராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர், முடிவில் பெரிய திருகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.