அரியலூர் சபர்மதி நர்சரி பள்ளியில் ஆங்கில இலக்கிய விழா

அரியலூர் சபர்மதி வித்யாலயா நர்சரி பள்ளியில், ஆங்கில இலக்கிய விழா நடைபெற்றது.

அரியலூர் கல்லூரி சாலையில் உள்ள சபர்மதி வித்யாலயா பள்ளி வளாகத்தில், லிட்ரரி ஃபெஸ்ட் எனப்படும், ஆங்கில இலக்கிய விழா நடைபெற்றது. ப்ரீ கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில வழி கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள், தமது செய்முறை திறமை மூலம் ஏற்பாடு செய்து நடத்திய, ஆங்கில இலக்கிய விழா கண்காட்சியை, பள்ளியின் தாளாளர் ரமேஷ் பிரேமலதா திறந்து வைத்தார், மேலாளர் சத்தியசீலன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள்  மற்றும் அவர்களது பெற்றோர் கண்டு களித்த, ஆங்கில இலக்கிய கண்காட்சியில், பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட, பலர் பங்கேற்றனர்.
முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை பூங்கோதை நன்றி கூறினார்.