வாலாஜா நகரம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அரியலூர் அருகே, வாலாஜா நகரம் கிராமத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா தலைமையில் நடைபெற்ற இம் முகாமில், ஊராட்சி மன்றத் தலைவர் அபிநயா இளையராஜா வரவேற்று பேசினார். அரியலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செந்தமிழ் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ஸ்ரீதேவி உள்ளிட்டோர், முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவிலான பல்வேறு துறைகள் சார்பில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த இம்முகாமில், வருவாய் துறை, மகளிர் திட்டம், வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, வேலைவாய்ப்பு துறை, தகவல் மையம் உள்பட, பல்வேறு துறைகள் சார்பில், அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விளக்கிப் பேசினர்.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில், வளர்க்கப்பட்ட நாற்றுகளை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகளிடம், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா வழங்கி பேசினார், ஒன்றிய கவுன்சிலர் ராணி மதியழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த சிறப்பு முகாமில், வாலாஜா நகரம் ஊராட்சி செயலாளர் தமிழ்க் குமரன் நன்றி கூறினார்.