அரியலூரில் விஸ்வ இந்து பரிசத் கொடியேற்று விழா

அரியலூரில் விஸ்வ இந்து பரிசத் சார்பில் கொடியேற்று விழா மற்றும் வேல் தாங்கிய ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் முழுவதும் தர்ம விழிப்புணர்வு யாத்திரை என்கிற பெயரில்  விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை சங்க கொடி ஏற்று விழா மற்றும் ஊர்வலம் நடைபெறுகிறது, அதையொட்டி அரியலூர் செட்டி ஏரிக்கரை அருகே உள்ள சக்தி விநாயகர் கோயில் முன்பு, அரியலூர் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற யாத்திரை துவக்க விழாவுக்கு, அதன் மாவட்ட செயலாளர் முத்துவேல் தலைமை வகித்தார், பஜ்ரங்தள்  அமைப்பின் மாநில அமைப்பாளர் வக்கீல் பீமாராவ் முன்னிலை வகித்தார்.

அரியலூர் செட்டிஏரிக்கரை சக்தி விநாயகர் கோவில் முன்பு நடைபெற்ற, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கொடியேற்று விழாவை தொடர்ந்து, அந்த அமைப்பினர், அரியலூர் பெரிய கடை வீதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் வரை, வேல் தாங்கிய ஊர்வலம் நடத்தி, ஏழு இடங்களில் கொடியேற்று விழாவும் நடத்தினார்கள், ஏராளமான பெண்கள் முளைப்பாரிகளுடன் கலந்து கொண்டனர்.

வாத்திய இசை முழக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில், பஜ்ரங்தள்  அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் அசோக் ஜி, மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் சிவன், ஆனந்த், ரமேஷ், சக்தி கணேஷ், ஆனந்த், சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.