அரியலூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் சார்பில் வாக்காளர்  பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலிருந்து ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் 18-வயது பூர்த்தியானவரா, இன்றே வாக்காளராக பதிவு செய்வீர், வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றத்திற்கு படிவம் 8-ஏ, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு படிவம் 8 என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி 100க்கும் மேற்பட்ட அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் பேரணியாக சென்றனர். அரியலூர் உழவர் சந்தை வழியாக அரியலூர் பேருந்து நிலையம் வரை சென்று பேரணி முடிவுற்றது.

பேரணியில், அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வட்டாட்சியர்கள் வேல்முருகன் (தேர்தல் பிரிவு), கண்ணன் (அரியலூர்) மற்றும் தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.