அரியலூரில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு கண்காணிப்புக்குழு கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், அதன் தலைவரும், சிதம்பரம் எம்.பி.,யுமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஈஸ்வரன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர், சிறப்பு அழைப்பாளர்களாக  கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், மத்திய அரசின் சார்பில், அரியலூர் மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 43 திட்டங்கள் குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்து தொல்.திருமாவளவன் தலைமையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் அலுவலகம், பேரூராட்சிகள், நகராட்சிகள்,  குடிநீர் வடிகால் வாரியம், மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை, நில அளவைத்துறை, மின்சார வாரியம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, பொது சுகாதாரம், பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், சத்துணவு, பி.எஸ்.என்.எல்.,  அஞ்சலகத் துறை, தெற்கு ரயில்வே, சுரங்கங்கள் மற்றும் கனிம வளத்துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறுத் துறை அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், பணி முன்னேற்றம் குறித்தும் எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் சுருளி பிரபு,  ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் முருகண்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் சுமதி அசோக சக்கரவர்த்தி (திருமானூர்), ரவிசங்கர் (ஜெயங்கொண்டம்), மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.