அரியலூரில் ராயல் சென்டினியல் அரிமா சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா

அரியலூரில் ராயல் சென்டினியல் அரிமா சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

அரியலூர் செயின்ட் மேரிஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற, அரியலூர் ராயல் சென்டினியல் அரிமா சங்க புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா, சங்கத் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. ஜெயராமன் வரவேற்று பேசினார். சாசனத் தலைவர் வாரணவாசி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.


2022- 2023 ஆண்டிற்கான, சங்கத்தின் புதிய தலைவராக காமராஜ், செயலாளராக மாலா தமிழரசன், பொருளாளராக சக்திவேல், உடனடி முன்னாள் தலைவராக சந்திரசேகர், முதல் துணைத்தலைவராக பவுன்ராஜ், இரண்டாம் துணைத் தலைவராக கரிகாலன், உறுப்பினர் வளர்ச்சி தலைவராக ராமரத்தினம், ஒருங்கிணைப்பாளராக பாஸ்கர், சேவை தலைவராக செல்வேந்திரன், மக்கள் தொடர்பு தலைவராக மணிவண்ணன், மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


புதிய பொறுப்பாளர்களை, அரிமா சங்கத்தின் இரண்டாம் மாவட்ட தலைவர் சௌரிராஜ், மாவட்ட உறுப்பினர் வளர்ச்சி தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் விஷால் சரவணன், மண்டல தலைவர் செல்வகுமார், வட்டாரத் தலைவர் சங்கர், உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள். அரியலூர் ராயல் சென்டினியல் அரிமா சங்கத்தின் புதிய தலைவர் தொழிலதிபர் காமராஜ் நன்றி தெரிவித்து பேசினார்.


விழாவை முன்னிட்டு லிங்கத்தரிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அரியலூர் தீயணைப்பு துறை, அரியலூர் மாவட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சேவை திட்டங்கள் வழங்கப்பட்டது.