அரியலூரில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

அரியலூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 297 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரால் பெறப்பட்டு, மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், அரியலூர் வட்டாரத்தைச் சார்ந்த 04 உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.5,25,000 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.
தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள விளையாட்டு பல்கலை கழகத்தில் 19.01.2023 அன்று 18வது மாநில அளவிலான பாரா விளையாட்டு போட்டிகளில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் முற்றிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி சிவகாமி 02 தங்கப்பதக்கங்களும், கார்த்திக்ராஜா 01 தங்க பதக்கமும், பாபு 01 வெள்ளி பதக்கமும் வென்றனர், இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.