அரியலூரில் நடைபெற்ற    ஐ.என்.ஆர்.எல்.எப்   மாநில செயற்குழு கூட்டம்

அரியலூரில் ஐ.என்.ஆர்.எல்.எப் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் சார்பு அமைப்பான, இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின், 123 வது மாநில செயற்குழு கூட்டம், அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில், மாநிலத் தலைவர் ஆர். கர்ணன் தலைமையில் நடைபெற்றது, இதில்  மாவட்டத் தலைவர் வில்சன் வரவேற்றுப் பேசினார்.


மாநில பொது செயலாளர் நாகராஜன், மாநில அமைப்பு செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் பேசிய இக்கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள நல வாரிய அலுவலகங்களில் உதவி கோரி, பொதுமக்கள் கொடுத்துள்ள மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், ஏற்கனவே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நல வாரிய உதவித்தொகைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை சரி செய்து, சம்பந்தப்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் நல வாரிய உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உட்பட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, முடிவில் கீழநெடுவாய் கண்ணன் நன்றி கூறினார்.