அரியலூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமுதாய பாதுகாப்பு பொதுக்கூட்டம்

அரியலூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சமுதாய பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே, அரியலூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற, சமுதாய பாதுகாப்பு பொதுக்கூட்டத்துக்கு, அதன் மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார், இணைத்தலைவர்  அப்துல் அஜித் வரவேற்று பேசினார்.

பித்அத் ஒழிப்பு மாநாடு, நாட்டில் தலை தூக்கும் சர்வாதிகாரம்  மற்றும் இந்திய நாட்டில் மதத்தின் பெயரால், முஸ்லிம்கள் கொல்லப்படுவது, சிறைச்சாலையில் தள்ளப்படுவது, மாணவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதியப்படுவது, முஸ்லிம் பெண்கள் அப்ளிகேஷன் மூலமாக மானபங்கம் செய்யப்படுவது, உள்ளிட்டவற்றை கண்டித்து நடைபெற்ற, சமுதாய பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம், மாநில செயலாளர் தாவூத் கைசர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட செயலாளர் சபியுல்லா, மாவட்ட பொருளாளர் சையது ரசீது, மாவட்ட நிர்வாகிகள் காதர் பாஷா, ராஜ் முஹம்மது மற்றும் ஏராளமான முஸ்லிம் பெண்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.