அரியலூரில் டீடோ ஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூரில் டீடோ ஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, டீடோ ஜாக் அமைப்பின், அரியலூர் வட்டார மற்றும் மாவட்ட அமைப்பு சார்பில், அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் எழில் தலைமை வகித்தார். அரியலூர் வட்டார செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

தொடக்க கல்வி ஆசிரியர்களை பெரிதும் பாதிக்கும், அரசாணை எண் 243 ஐ திரும்ப பெற வேண்டும். பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, தமிழக அரசை வலியுறுத்தி, அரியலூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவர் நம்பிராஜன் சிறப்புரை ஆற்றினார். அதில் வருகிற 19-ம் தேதி சென்னையில் மாநில அளவில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் பாண்டியன், வேலுசாமி, வேல்முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.